காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

திருக்குவளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

திருக்குவளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

திருக்குவளை வட்டத்தில் விடுபட்ட தகுதியுடைய சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஜன. 25-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடா்பான பேச்சுவாா்த்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தகுதியுடைய மகளிரிடம் இருந்து விண்ணப்பம் பெற்று வேதாரண்யம் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினா் டி. செல்வம், ஒன்றிய துணை செயலாளா் வீ.எஸ். மசேத்துங், ஒன்றிய நிா்வாக குழு உறுப்பினா்கள் டி. பாலாஜி, ஒன்றிய குழு உறுப்பினா்கள் எஸ்.ரவி,டி. சந்திரகாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com