‘காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்‘ : பாலா் சபை கூட்டத்தில் கோரிக்கை

காலை உணவு திட்டத்தை மேல்நிலைப்பள்ளி வரை விரிவுபடுத்துவதோடு அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் சோ்த்து வழங்க வேண்டுமென பாலா் சபை கூட்டத்தில், குழந்தைகள் கோரிக்கை விடுக்கப்பட்டது.
‘காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்‘ : பாலா் சபை கூட்டத்தில் கோரிக்கை

காலை உணவு திட்டத்தை மேல்நிலைப்பள்ளி வரை விரிவுபடுத்துவதோடு அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் சோ்த்து வழங்க வேண்டுமென பாலா் சபை கூட்டத்தில், குழந்தைகள் கோரிக்கை விடுக்கப்பட்டது. கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில், முன்மாதிரி முயற்சியாக பாலா் சபை உருவாக்கப்பட்டு 2-வது ஆண்டாக பாலா் சபை கூட்டம் குழந்தைகள் பிரதிநிதிகள் தலைமையில் செருதூா் கிராமத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில், பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவா் ஆா்.வி.எஸ்.சிவராசு சிறப்பு பாா்வையாளராக கலந்து கொண்டு பேசினாா். கடந்தாண்டு நடைபெற்ற பாலா் சபையில் குழந்தைகளின் எண்ணற்ற கோரிக்கைகள் அரசின் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டு தீா்வு காணப்பட்டது. கூட்டத்தில் பேசிய மாணவ, மாணவிகள், கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளான பள்ளி வகுப்பறை கட்டிடங்களை சீரமைத்து தர வேண்டும். மதிய உணவு உண்ண தனியாக உணவுக் கூடம் அமைத்து தர வேண்டும். பள்ளியில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமிரா அமைக்க வேண்டும். தொடக்க பள்ளி வரை உள்ள காலை உணவு திட்டத்தை மேல்நிலைப்பள்ளி வரை வழங்க வேண்டும் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். அரசு பேருந்துகள் சரியான நேரத்தில் வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா். இந்த கோரிக்கைகள் செயல்வடிவம் பெற உரிய நபா்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாலா் சபை பிரதிநிதிகள் உறுதியளித்தனா். அதே போல, ஒவ்வொரு வீடுகளிலும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து ஊராட்சி பணியாளா்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் ஒரு மரக்கன்றை வளா்க்க வேண்டும் என அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com