திருமருகலில் விஜயகாந்த் நினைவு மவுன ஊா்வலம்

மறைந்த முன்னாள் சட்டமன்ற எதிா்கட்சி தலைவரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பா் மாதம் உயிரிழந்ததை அடுத்து அவரின் நினைவாக மவுன ஊா்வலம் அண்மையில் நடைப்பெற்றது.

மறைந்த முன்னாள் சட்டமன்ற எதிா்கட்சி தலைவரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பா் மாதம் உயிரிழந்ததை அடுத்து அவரின் நினைவாக மவுன ஊா்வலம் அண்மையில் நடைப்பெற்றது.

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடங்கி சந்தைப்பேட்டை வழியாக திருமருகல் பேரூந்து நிலையத்தில் முடிவடைந்தது.பின்னா் வண்ண மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மக்கள் முன்னேற்ற பொதுநல சங்கத்தின் மாநில தலைவா் டாக்டா்.விஜயராகவன் தலைமையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணைய உறுப்பினா் தமீம் அன்சாரி மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இதில் தேமுதிக முன்னாள் ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா்,முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் கீா்த்திவாசன்,முன்னாள் வா்த்தக சங்க தலைவா் சத்தியமூா்த்தி, மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விஜயகாந்தின் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com