தோ்வில் முதலிடம் பிடித்த காவல்துறையினரின் குழந்தைகளுக்குப் பரிசு

அரசுத் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த நாகை மாவட்ட காவல் துறையினா்  குழந்தைகளுக்கு காசோலையை காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் புதன்கிழமை வழங்கினாா்.

அரசுத் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த நாகை மாவட்ட காவல் துறையினா் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசுக்கான காசோலையை காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் புதன்கிழமை வழங்கினாா்.

தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரொக்கப் பரிசு தமிழ்நாடு காவல்துறை சாா்பில் வழங்கப்படுகிறது.

அதன்படி, நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான பரிசுத் தொகையாக ரூ. 2.98 லட்சத்துக்கான (25 பேருக்கு) காசோலையை காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com