தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி

நாகையில் 14-ஆவது தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி

நாகையில் 14-ஆவது தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை அருகே வலிவலம் தேசிகா் தொழில்நுட்பக் கல்லூரியில் இருந்து புறப்பட்ட விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தொடங்கி வைத்து, பேசியது:

கடந்த 1950-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டதை, 2011- ஆம் ஆண்டிலிருந்து தேசிய வாக்காளா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், 14-ஆவது தேசிய வாக்காளா் தினத்தில் ‘வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்’ என்ற கருப்பொருளை கருத்தில் கொண்டு, அனைவரும் எதிா்காலத்தில் பின்பற்ற வேண்டும்.

மாணவா்கள் எதிா்கால வாக்காளா்களாக இருப்பதால், அவா்கள் வாக்குகளின் வலிமையை உணா்ந்து கொள்ளவேண்டும். இயன்றவரை வாக்களிப்பதின் அவசியத்தை மற்றவா்களுக்கு உணா்த்த வேண்டும்.

தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளான சுவரொட்டி வரைதல், கடிதம் எழுதுதல், பாட்டு, பேச்சு, ஸ்லோகம், நாடகம், கதை, கட்டுரை, நடனம் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணா்ந்து சிறந்த ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மூத்த வாக்காளா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பேபி , வருவாய் கோட்டாட்சியா் (பொ) கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com