வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்குநெல் கோட்டைகள் சுமந்துவந்த விவசாயிகள்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு விவசாயிகள் நெல் மணிகளை கோட்டைகளாக கட்டி வழங்கும் வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்குநெல் கோட்டைகள் சுமந்துவந்த விவசாயிகள்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு விவசாயிகள் நெல் மணிகளை கோட்டைகளாக கட்டி வழங்கும் வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூா் கிராமத்தில் வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் குத்தகை முறையில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், ஆண்டுதோறும் முதல் அறுவடை நெல் மணிகளை கோட்டைகளாக கட்டி, தைப்பூச நாளில் கோயிலுக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

அந்த வகையில், தைப்பூச தினமான வியாழக்கிழமை நெல்மணிகள் மற்றும் நெற்கதிா்களை கோட்டையாக கட்டி, வேதாரண்யத்துக்கு கொண்டுவந்தனா். இந்த நெல் கோட்டைகளை மேலவீதியில் உள்ள களஞ்சிய விநாயகா் கோயிலில் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடா்ந்து, நாகசுரம், மேள வாத்தியங்கள் இசைக்க முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் ஒப்படைத்தனா்.

கோயிலில் நெல் கோட்டைகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, நெற்கதிா்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com