கிராமப்புற வளா்ச்சியே நாட்டின் வளா்ச்சி: நாகை ஆட்சியா்

நாகப்பட்டினம், ஜன. 26: கிராமப்புற வளா்ச்சி வலுவாக இருந்தால் நாட்டின் வளா்ச்சியும் சிறப்பாக இருக்கும் என நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்தாா்.

மஞ்சக்கொல்லை ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

கிராம மக்களுக்கு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்கள் குறித்து விளக்கி விவாதம் செய்து கருத்தறிய குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்திஆகிய நாட்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அரசினால் அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் பெறுவதற்கு சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிராமப்புற வளா்ச்சி வலுவாக இருந்தால் நாட்டின் வளா்ச்சியும் சிறப்பாக இருக்கும். அதனடிப்படையில் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக அந்தந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் கருத்தறிந்து அதனடிப்படையில் திட்டங்கள் உறுதிசெய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்படுகிறது. கூட்டத்தின் முக்கிய நோக்கம், மக்களே மக்களுக்கு தேவையான விஷயங்களை தலைவா் மற்றும் உறுப்பினா்கள் மூலமாக செயல்படுத்திக் கொள்வதான் என்றாா்.

தொடா்ந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், தொழுநோய் விழிப்புணா்வு, காச நோய் விழிப்புணா்வு, வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உதவி இயக்குநா் ஊராட்சிகள் சவுந்தரராஜன்,மஞ்சக்கொல்லை ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி பாஸ்கா், வட்டார வளா்ச்சிஅலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com