குடியரசு தினம்: ரூ.41லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

2536ng26rd060408
2536ng26rd060408

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ். (உடன்) மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.

நாகப்பட்டினம், ஜன. 26: நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 75 -ஆவது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் ஏற்றிவைத்து ரூ. 41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

விழாவில் 32 பயனாளிகளுக்கு ரூ. 41.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 290 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Image Caption

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தும் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ். (உடன்) மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com