நாகை, மயிலாடுதுறையில் குடியரசு தின விழா

திருக்குவளை: கிள்ளுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் தலைமையாசிரியா் சா. வைத்தியநாதன், வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியா் முரளி ஆகியோா் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

திருமருகல்: திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். ராதாகிருட்டிணன், திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் ஆயிஷா சித்திகா, காவல் நிலையத்தில் ஆய்வாளா் அக்பா் அலி, அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் மகேஸ்வரன், புறாக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் மாணிக்கவாசகம், திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் அமுதா, தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலா் திலக்பாபு ஆகியோா் தலைமையிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com