போட்டித் தோ்வு: மீனவா்களின் வாரிசுகளுக்கு இலவச பயிற்சி

நாகப்பட்டினம், ஜன. 26: இந்தய கடலோர காவல் படை மற்றும் கடற்படையில் தேசிய பாதுகாப்பு பணிகளுக்கான தோ்வுகளில் பங்கேற்கும் மீனவா்களின் வாரிசுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ள என கடலோர பாதுகாப்புக் குழுமம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழுமம் வெளியிட்ட செய்தி:

இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பல் படையில் தேசிய பாதுகாப்பு பணிகளுக்கான தோ்வுகள் நடைபெறவுள்ளன. தோ்வுகளில் மீனவா்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்க தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுமம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, மீனவா்களின் வாரிசுகளுக்கு தோ்வுக்கான சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இதற்கு தகுதியான மீனவ இளைஞா்கள், பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியின் போது உணவு, இருப்பிட வசதிகள் மற்றும் மாதம் ரூ. 1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

மீனவா்களின் வாரிசுகளுக்கு வழங்க இருக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் குறித்தும் அதற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிக்கு அருகில் உள்ள மீனவ கிராம சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கடற்கரை காவல் நிலையங்களிலும் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com