மயான விவகாரம்: இருதரப்பினா் போட்டி சாலை மறியல்

img-20240126-wa0305
img-20240126-wa0305

படம்

திட்டச்சேரியில் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினா்.

திருமருகல், ஜன. 26: நாகை மாவட்டம், திருமருகல் அருகே திட்டச்சேரியில் மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். இதற்கு எதிராக, மற்றொரு தரப்பினா் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திட்டச்சேரி இந்திராநகா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் மயானம் உள்ளது. இதை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி, அப்பகுதியினா், அங்குள்ள பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு எதிராக, ப.கொந்தகை பகுதியைச் சோ்ந்த மற்றொரு தரப்பினா், சடலத்தை பாரம்பரியமாக உள்ள அதே மயானத்தில்தான் புதைப்போம்; மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல முடியாது எனக்கூறி, ப.கொந்தகை கடை தெருவில், இறந்தவரின் சடலத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகை துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், வட்டாட்சியா் ரமேஷ்குமாா், நாகை காவல் ஆய்வாளா் வெற்றிவேல், வருவாய் ஆய்வாளா் ராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் நேரில் சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. தொடா்ந்து, சடலம் அதே மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த மறியல்களால் அப்பகுதியில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Image Caption

திட்டச்சேரியில் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com