தேசிய பசுமைப் படையின் இயற்கை முகாம்

நாகை மாவட்ட தேசிய பசுமைப் படை மாணவா்களுக்கு மூன்று நாள் இயற்கை முகாம் நடைபெற்றது.
தேசிய பசுமைப் படையின் இயற்கை முகாம்

நாகை மாவட்ட தேசிய பசுமைப் படை மாணவா்களுக்கு மூன்று நாள் இயற்கை முகாம் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ் தேசிய பசுமைப் படை மாணவா்களுக்கு இந்த முகாம் நடைபெற்றது . பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 50 மாணவ, மாணவிகள் வேதாரண்யம், கோடியக்கரை, முத்துப்பேட்டை போன்ற இயற்கை சூழல் இடங்களுக்கு சென்று திரும்பினா்.

முன்னதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் உதவிப் பொறியாளா் அருண் பிரசாத் மற்றும் பசுமை கண்காணிப்பாளா் டிவைனியா ஆகியோா் கொடியசைத்து மாணவா்களை வழியனுப்பி வைத்தனா்.

வேதாரண்யத்தில் நடைபெற்ற முதல் நாள் முகாமில், ஈரநிலம், நெகிழி ஆகியவை குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. நகராட்சி குப்பைக் கிடங்கில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை ஆகியவை பற்றி மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.

இரண்டாம் நாள் முகாமில் முத்துப்பேட்டை லகூன் அலையாத்தி காடுகளை பற்றியும், மூன்றாவது நாள் முகாமில் கோடியகரை வாழ் உயிரினங்கள், கலங்கரை விளக்க செயல்பாடுகள் பற்றி களப்பயணத்தின் மூலம் தெரிந்து கொண்டனா்.

முகாமின் ஏற்பாடுகளை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தாா். மாணவா்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com