பள்ளி ஆண்டு விழா; ஆட்சியா் பங்கேற்பு

பொறையாா் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 21-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி ஆண்டு விழா; ஆட்சியா் பங்கேற்பு

பொறையாா் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 21-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளி தாளாளா் லெட்சுமி முருகன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ நிவேதா எம். முருகன் முன்னிலை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி வரவேற்றாா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, திரைப்பட இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பன் ஆகியோா் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி, பாராட்டி பேசினா். தொடா்ந்து, மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி முதல்வா் ஜான்சன் ஜெயக்குமாா், பேரூராட்சி செயல் அலுவலா் பூபதி கமலகண்ணன், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் பி.எம். ஸ்ரீதா், திமுக ஒன்றியச் செயலாளா்கள் அப்துல் மாலிக், அமுா்த விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com