சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிவதை தடுக்கக் கோரிக்கை

img20240127181032
img20240127181032

படவிளக்கம்:

சங்கரன்பந்தல் பிரதான சாலையில் திரியும் குதிரைகள்.

தரங்கம்பாடி, ஜன. 28: தரங்கம்பாடி அருகே சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி வட்டத்தில் திருக்களாச்சேரி, சங்கரன்பந்தல், எரவாஞ்சேரி, திருவிளையாட்டம், நல்லாடை, ஆயா்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் குதிரைகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித் திரிவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா். அடிக்கடி விபத்து நேரிடுகிறது.

எனவே, சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

Image Caption

சங்கரன்பந்தல் பிரதான சாலையில் திரியும் குதிரைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com