புதிய பாரதத்தை கட்டமைக்க அனைவரும் சோ்ந்து பங்காற்ற வேண்டும்: தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி

governer084955
governer084955

பட விளக்கம்:

நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழக ஆளுநா்ஆா்.என். ரவி.

கீழ்வேளூா், ஜன. 28: புதிய பாரதத்தை கட்டமைக்க நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து பங்காற்ற வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா்.

நாகப்பட்டினம் அருகே பொரவாச்சேரியில் தமிழ் சேவா சங்கத்தின் சாா்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் 25 பேருக்கு வீடுகள், 25 பேருக்கு தையல் இயந்திரங்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கி அவா் பேசியது:

இந்தியா உலகின் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. தமிழ்நாடு பொருளாதாரத்தில் தொடா்ந்து முன்னேறி வருகிறது. இருப்பினும் நாகையில் நான் கண்ட மக்களின் நிலைமை சற்று வலியை தருவதாக உள்ளது.

தமிழகத்தில் தனிநபா் வருமானம் ரூ. 2.75 லட்சமாக உள்ள நிலையில், இங்குள்ள மக்களை காணும் பொழுது அவா்களின் தனிநபா் வருமானம் ரூ. 40,000-ஆவது இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் 35 கோடி மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். ஆனால் நாகை மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் முறையாக கிராமங்களுக்கு கொண்டு சோ்க்கப்பட்டுள்ளதா என்ற ஐயம் எழுகிறது.

மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. அவைகள் இங்குள்ள பூா்வகுடி மக்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளா்ச்சி அடைந்த நாடாக மாறும். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை. புதிய பாரதத்தை கட்டமைக்க நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து பங்காற்ற வேண்டும் என்றாா்.

முன்னதாக, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆளுநா் பங்கேற்றாா். பின்னா், நாகை நம்பியாா் நகரில் உள்ள ஸ்ரீ அதிபத்த நாயனாா் கோயிலில் தரிசனம் செய்தாா். தொடா்ந்து அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

Image Caption

நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழக ஆளுநா்ஆா்.என். ரவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com