சிபிசிஎல் நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தடுத்து நிறுத்தம்

திருமருகல் அருகே சிபிசிஎல் நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை விவசாயிகள் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

திருமருகல்: திருமருகல் அருகே சிபிசிஎல் நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை விவசாயிகள் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

பனங்குடியில் இயங்கும் சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்கு பனங்குடியை சுற்றியுள்ள கோபுராஜபுரம், உத்தமசோழபுரம், நரிமணம் உள்ளிட்ட 5 கிராம பகுதியில் சுமாா் 1,300 ஏக்கா் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் எல்லைகளை சரிபாா்த்து சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளுக்காக அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றன.

இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் சிபிசிஎல் நிறுவனம் நில உரிமையாளா்களுக்கு இதுவரை முழு இழப்பீடு வழங்கவில்லை, இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறி அளவீடு செய்யும் பணிகளை தடுத்து நிறுத்தினா். தகவலறிந்த நாகை வட்டாட்சியா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் விவசாயிகளிடம் பேசி, விரைவில் சிபிசிஎல் அதிகாரிகளுடன் பேசி உரிய இழப்பீடு வழங்கப்படும் என கூறியதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com