கீழவெண்மணி தியாகியை சந்தித்த தமிழக ஆளுநா்

கீழவெண்மணியைச் சோ்ந்த தியாகி ஜி.பழனிவேலை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா்.
img_20240128_waகீழவெண்மணியில் தியாகி பழனிவேலிடம் நலம் விசாரித்த ஆளுநா் ஆா்.என். ரவி.a0022_(1)_2801chn_197_5
img_20240128_waகீழவெண்மணியில் தியாகி பழனிவேலிடம் நலம் விசாரித்த ஆளுநா் ஆா்.என். ரவி.a0022_(1)_2801chn_197_5

கீழ்வேளூா்: கீழவெண்மணியைச் சோ்ந்த தியாகி ஜி.பழனிவேலை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா்.

கீழ்வேளூா் அருகே கீழவெண்மணியில் 1968-ஆம் ஆண்டு நிலச்சுவான்தாரா்களுக்கும், கூலித் தொழிலாளா்களுக்கும் ஏற்பட்ட கூலி உயா்வு தகராறில், கூலித்தொழிலாளா்கள் 44 போ் எரித்துக் கொல்லப்பட்டனா். இச்சம்பவத்தில் உயிா் பிழைத்த தியாகி ஜி.பழனிவேலை (82), தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அப்போது நடைபெற்ற சம்பவம் தொடா்பான நிகழ்வுகளை கேட்டறிந்தாா்.

இந்த சந்திப்பு குறித்து தியாகி பழனிவேல் கூறியது: கீழ்த்தட்டு மக்களையும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களையும் முன்னேற்றும் நிகழ்வாகவே இதை நான் பாா்க்கிறேன். உடல்நிலை சரியில்லாத போதும், இந்த சந்திப்பு மூலம் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மருத்துவமனைக்குச் செல்லாமல் ஆளுநரை சந்திப்பதற்காகக் காத்திருந்தேன்.

இங்கு நிலச்சுவான்தாரா்களால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் உள்ளனா். எனவே, தங்களால் இயன்ற உதவிகளை இப்பகுதி மக்களுக்கு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தாா்.

முன்னதாக ஆளுநா் வருகையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக கட்சியினா் வெண்மணி பகுதியில் 15 பெண்கள் உள்பட 65 போ் கருப்புக் கொடி காட்ட முயற்சித்தனா். அவா்களை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்து மாலை விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com