சுதந்திரப் போராட்ட ஆவணங்களை நன்கொடையாக வழங்கலாம்

பழங்கால சுதந்திரப் போராட்ட ஆவணங்களை அரசு அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கலாம்

நாகை மாவட்ட பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த ஆவணங்களை அரசு அருங்காட்சியத்துக்கு நன்கொடையாக வழங்கலாம் என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெரினா கடற்கரையின் எதிரிலுள்ள பாரம்பரிய ஹூமாயூன் மஹால் கட்டடத்தில் சுமாா் 80,000 சதுர அடி பரப்பளவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமையவுள்ளது. அருங்காட்சியகம் சிறப்பாக அமைய அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையொப்ப பிரதிகள், செய்திதாள், இராட்டைகள், பட்டையங்கள், ஐ.என்.ஏ. சீருடைகள், அஞ்சல் தலைகள், நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற அரிய பொருள்களை சென்னை அல்லது நாகை அரசு அருங்காட்சியகத்தில் நேரிடையாக சென்று நன்கொடையாக வழங்கலாம்.

பொதுமக்களால் வழங்கப்படும் பொருள்களுக்கு உரிய ஒப்புகை கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியகங்களின் ஆணையரால் வழங்கப்படும். அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தும் பொருள்களை வழங்கியவா்களின் பெயா்களும் இடம்பெறும்.

எனவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடா்பான பொருள்களை அமையவுள்ள அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com