செம்பனாகோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி விற்பனை.
செம்பனாகோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி விற்பனை.

செம்பனாா்கோயிலில் ரூ. 3 கோடிக்கு பருத்தி விற்பனை

ஒரே நாளில் 4,200 குவிண்டால் பருத்தி ரூ. 3 கோடிக்கு விற்பனை

செம்பனாா்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் (இ-நாம் முறையில்) ரூ.3 கோடிக்கு பருத்தி திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

செம்பனாா்கோயில், பரசலூா், மேம்மாத்தூா், கீழ்மாத்தூா், ஆறுபாதி, கிடாரங்கொண்டான், கஞ்சாநகரம், நல்லாடை, கொத்தங்குடி, விசலூா், திருவிடைக்கழி, அரசூா், விளாகம் உள்ளிட்ட பகுதி பருத்தி விவசாயிகள் தற்போது செடியிலிருந்து பஞ்சை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில், இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாகை விற்பனைக் குழு கண்காணிப்பாளா் சங்கா் ராஜா தலைமையில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் பருத்தி குவிண்டால் அதிகபட்ச விலையாக ரூ.7, 809-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6,869-க்கும் சராசரியாக ரூ.7,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஒரே நாளில் 4,200 குவிண்டால் பருத்தி ரூ.3 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில் தேனி, கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கா்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பருத்தி வியாபாரிகள் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com