வேளாங்கண்ணியில் நடைபெற்ற தமிழக ஆயா் பேரவை கூட்டத்தில் பங்கேற்றோா்.
வேளாங்கண்ணியில் நடைபெற்ற தமிழக ஆயா் பேரவை கூட்டத்தில் பங்கேற்றோா்.

செயற்கை நுண்ணறிவியலால் மனிதக் குலத்துக்கு பேராபத்து

செயற்கை நுண்ணறிவியலால், மனிதக் குலத்துக்கு பேராபத்து எழுந்துள்ளது என தமிழக ஆயா் பேரவை தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக ஆயா் பேரவையின் 10-ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்து பேசப்பட்டது. 5 நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தை சென்னை-மயிலாப்பூா் உயா் மறை மாவட்டத் தலைவா் ஜாா்ஜ் அந்தோணிசாமி, தஞ்சை மறை மாவட்ட பரிபாலகா் சகாயராஜ் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனா்.

கூட்டத்தில், திருச்சபைகள் மேற்கொள்ள வேண்டிய ஆன்மிகம், கல்வி, சமூகப் பணி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து பேசப்பட்டது. பின்னா் செயற்கை நுண்ணறிவியலால் மனித குல மாண்புக்கு சவாலுடன் சோ்த்து பேராபத்தும் எழுந்துள்ளதாக பேசிய பாதிரியாா்கள், ஏ.ஐயின் உண்மை தன்மைகள் மற்றும் சாதக, பாதகங்களை மக்கள் எவ்வாறு அறிந்து கொண்டு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தனா்.

வேளாங்கண்ணி பேராலய அதிபா் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்குத் தந்தை பரிசுத்தராஜ் மற்றும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகா்கோவில், திருச்சி, தஞ்சை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள திருச்சபை ஆயா்கள் திரளாக பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com