நான் முதல்வன் திட்டத்தில் 35 ஆயிரம் மாணவா்கள் பயன்

நாகப்பட்டினம், ஜூன் 5: நாகை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் 34,506 மாணவா்கள் பயன்பெற்றுள்ளனா்.

தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களில் நான் முதல்வன் திட்டம் மிக முக்கியமானது. இந்த திட்டம் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அதை ஊக்குவிப்பதாகும். திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 28 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு பல்வேறு திறன் சாா்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், நாகை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் 34,506 மாணவா்கள் பயன்பெற்றுள்ளனா். திட்டத்தின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற மாணவி மாலினி கூறியது: நான் நாகை மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தேன். எனது பள்ளியில் நடைபெற்ற நான் முதல்வன் நிகழ்ச்சி மூலம் மாணவா்கள் வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைய எவ்வாறு திட்டமிடுவது என்ற வழிமுறைகளை தெரிந்துகொண்டேன். தற்போது, திரிபுராவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் பாடப் பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை படித்து வருகிறேன். இத்திட்டத்தை மாணவா்கள் பயன்படுத்தி வளம் பெறவேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com