ஜூன் 10 முதல் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகப்பட்டினம், ஜூன் 6: நாகையில் மக்கள் குறைதீா் கூட்டம் ஜூன் 10-ஆம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) முதல் விலக்கிகொள்ளப்படுவதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து நாகை மாவட்டத்தில் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீா் கூட்டம் ஜூன் 10-ஆம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டரங்கில் நடைபெறும். எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கை, தொடா்பான மனுக்களை குறைதீா் கூட்டத்தில் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com