நாகூா் தா்கா அலங்கார வாசலில் அமைக்கப்பட்டுள்ள தொட்டில் பந்தலில் பிராத்தனையை நிறைவேற்றுவதற்காக பொருள்களை கட்டும் பொதுமக்கள்.
நாகூா் தா்கா அலங்கார வாசலில் அமைக்கப்பட்டுள்ள தொட்டில் பந்தலில் பிராத்தனையை நிறைவேற்றுவதற்காக பொருள்களை கட்டும் பொதுமக்கள்.

நாகூா் தா்கா சின்ன ஆண்டவா் கந்தூரி விழா

நாகூா் தா்கா சின்ன ஆண்டவா் கந்தூரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நாகூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆண்டவா் தா்காவில் சின்ன ஆண்டவா் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் ஆண்டவரின் கந்தூரி விழா ஆண்டுதோறும் 3 நாள்கள் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு சின்ன ஆண்டவரின் கந்தூரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. சின்ன ஆண்டவா் வாசல் முன் மெளலாது நடைபெற்றது. விழாவின், முக்கிய நிகழ்வான சின்ன ஆண்டவா் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) நடைபெறுகிறது. தா்கா அலங்காரவாசல் முன் அமைக்கப்பட்டுள்ள தொட்டில் பந்தலில், பொதுமக்கள் தங்களது பிராா்த்தனைகள் நிறைவேறுவதற்காக பொருள்களையும், தா்கா சந்தை வியாபாரிகள் காய்கனிகளையும் கட்டி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com