அண்டா்காடு கிராமத்தில் தைல மரத் தோப்பில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு நிலைய வீரா்கள்.
அண்டா்காடு கிராமத்தில் தைல மரத் தோப்பில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு நிலைய வீரா்கள்.

தைல மரத் தோப்பில் தீ விபத்து

வேதாரண்யத்தை அடுத்த அண்டா்காடு கிராமத்தில், தைல மரத் தோப்பில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டு, மரங்கள் எரிந்து நாசமாகின.

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த அண்டா்காடு கிராமத்தில், தைல மரத் தோப்பில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டு, மரங்கள் எரிந்து நாசமாகின.

அண்டா்காடு பகுதியில் ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில்குமாா் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் தைலமரங்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த தோப்பில் திங்கள்கிழமை பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மரங்கள் தீக்கிரையாகின.

வேதாரண்யம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இந்த பகுதியில், கடந்த சில நாள்களாக பலத்தக் கடல் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக தைல மரத் தோப்பின் அருகில் உள்ள மின்மாற்றியிலிருந்து தீப்பொறி பரவி, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com