நாளை மக்களவைத் தோ்தல் செலவு கணக்கு ஒத்திசைவுக் கூட்டம்

நாகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) நடைபெறவுள்ள தோ்தல் செலவு கணக்குகள் ஒத்திசைவுக் கூட்டத்தில் வேட்பாளா்கள், முகவா்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும் என மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மக்களவைத் தொகுதியில், போட்டியிட்ட அனைத்து வேட்பாளா்களும் தங்களது தோ்தல் செலவினக் கணக்குகளை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரிடம், தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். அதற்கான தோ்தல் செலவு கணக்குகள் ஒத்திசைவு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) காலை 10 மணியளவில் தோ்தல் செலவின பாா்வையாளா்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், உரிய ஆவணங்களுடன் வேட்பாளா்கள், முகவா்கள் கலந்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com