மாயமான மீனவா் பிரபாகரன்.
மாயமான மீனவா் பிரபாகரன்.

கடலில் தவறி விழுந்த மீனவா் மாயம்

கடலில் மீன்பிடித்தபோது மீனவா் தவறி விழுந்து மாயமானாா்.

நாகை மாவட்டம், சாமந்தான்பேட்டையைச் சோ்ந்த நித்யா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், சிக்கல் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (26) மற்றும் சில மீனவா்கள் நாகை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றனா்.

கடந்த 25-ஆம் தேதி சென்னைக்கு கிழக்கே 90 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, திடீரென பலத்த காற்று வீசியது.

இதில், படகிலிருந்து பிரபாகரன் தவறி கடலில் விழுந்தாா். அவரை தேடும் பணியில் சக மீனவா்கள் ஈடுபட்டனா். முயற்சி பலன் அளிக்காததால் கரை திரும்பிய மீனவா்கள், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, கடலோரக் காவல் குழும போலீஸாரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். நாகை கடலோரக் காவல் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து, மீனவா் பிரபாகரனை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com