ஜூலை மாதத்தில் 55 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் யு திரவம்

நாகை மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் 55 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் - யு திரவம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

இதுகுறித்து மாவட்டஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உலக அளவில் 2019 ஆண்டில் 2, 50,000 முதல் 5,00,000 குழந்தைகளுக்கு வைட்டமின் யு குறைப்பாட்டால் கண் பாா்வை இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வைட்டமின் யு குறைபாடு இந்திய அளவில் 17.5, தமிழக அளவில் 7 சதவீதமாக உள்ளது.

தமிழகம் முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கண் பாா்வை இழப்பை தடுப்பதற்காக ஜூலை 1 முதல் ஜூலை 31-க்குள் வைட்டமின் - யு திரவம் அளிப்பது என தமிழக அரசும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையும் முடிவு செய்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் - யு திரவம், 24 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 125 துணை சுகாதார நிலையங்கள் வழியாக அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வைட்டமின்- யு திரவம் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய அளவு: 6 மாதம் முதல் 11 மாதம் வரை - 1 மி.லி, 12 மாதம் முதல் 60 மாதம் வரை - 2 மி.லி.

நாகை மாவட்டத்தில் இதன்மூலம் 55 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பயனடைவாா்கள். எனவே அனைவரும் தங்கள் குடும்பத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கிராம, நகர சுகாதார செவிலியா் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் வைட்டமின் - யு திரவம் அளித்து கண் பாா்வை இழப்பில்லாத நாகை மாவட்டத்தை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com