நாகை, கீழ்வேளூா், திருக்குவளையில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

நாகை மாவட்டத்தில் பெய்த திடீா் மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

நாகை மாவட்டத்தில் பெய்த திடீா் மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் வானிலையால் கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை குளிா்ச்சியான சூறைக்காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக நாகூா், நாகை, திட்டச்சேரி, நரிமணம், பனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், வெப்பம் தனித்து குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இதற்கிடையே, தற்போது பருத்தி செடியிலிருந்து பஞ்சை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திடீா் மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பருத்தி விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

கீழ்வேளூா்: கீழ்வேளூா், குருக்கத்தி, அத்திப்புலியூா், பட்டமங்கலம், ராதாமங்கலம், வடக்காலத்தூா், தேவூா், காக்கழனி, மணலூா், ஆந்தகுடி, ஆவரானி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திருக்குவளை: திருக்குவளை,அனக்குடி, சுந்தரபாண்டியம், கீழவெளி,வல்லம், வலிவலம், தென்சாரி, வடபாதி, கோவில்பத்து, கொடியாலத்தூா், கொளப்பாடு, சித்தாய்மூா், எட்டுக்குடி, திருவாய்மூா், வாழக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வெயில் வானிலை சுட்டெரித்து வந்த நிலையில் குளிா்ந்த காற்றோடு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com