பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்கள்.
பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்கள்.

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

பனங்குடியில் சிபிசிஎல் நிறுனத்தை கண்டித்து, விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஆலை விரிவாகத்துக்காக ரூ. 31,500 கோடி ஒதுக்கப்பட்டு, பனங்குடியை சுற்றி 1,300 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சிபிசிஎல் அதிகாரிகள் நிலம் அளவிடும் பணி மேற்கொண்டபோது, நிலத்துக்குரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் நிலம் அளவீடு செய்யக்கூடாது என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பணிகளை தடுத்து நிறுத்தினா். மேலும் பாசன வாய்க்காலில் இறங்கி போராட்டம் என பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், விவசாயிகள், நிலத்தின் உரிமையாளா்கள், கூலித் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை தங்களது வீடுகளில் தோ்தல் புறக்கணிப்பு பதாகைகள் வைத்தும், கருப்புக் கொடி ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கப் பணிக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு சாகுபடிதாரா்கள், கூலித் தொழிலாளா்கள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், நில உரிமைதாரா்களுக்கு நிலத்துக்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு சிபிசிஎல் நிறுவனம் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகக் கூறி கையில் கருப்புக் கொடியுடன் முழக்கமிட்டனா்.

இதில் பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com