தோ்தல் விழிப்புணா்வு ஊா்வலம்

திருமருகல்: திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி மற்றும் ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊா்வலத்துக்கு நாகை மாவட்ட கூடுதல் ஆட்சியா் ரஞ்சித்சிங் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜகோபால், ஜவகா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி அலுவலகத்தில் தொடங்கிய ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. தொடா்ந்து, தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஊராட்சித் தலைவா் மோகன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுகுமாறன், ஊராட்சி செயலா் பிரகாஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com