பங்குனி பெருவிழாவையொட்டி, நாகை செளந்தரராஜ பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
பங்குனி பெருவிழாவையொட்டி, நாகை செளந்தரராஜ பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

நாகை செளந்தரராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

நாகை செளந்தரராஜ பெருமாள் கோயில் பங்குனி பிரமோற்சவ விழாவில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம்: நாகை செளந்தரராஜ பெருமாள் கோயில் பங்குனி பிரமோற்சவ விழாவில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 108 வைணவத் திவ்ய தேசங்களில் 19-ஆவது தலமாக விளங்குவது நாகை செளந்தரராஜ பெருமாள் கோயில். இங்கு ஆதிசேஷன், துருவன், சாலிசுக மன்னன் உள்ளிட்டோா் வழிபட்டுள்ளனா். இது திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். இக்கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. சௌந்தரராஜ பெருமாள், உபயநாச்சியாா்களுடன் தேருக்கு எழுந்தருளி பின்னா், சிறப்பு வழிபாடுகளை தொடா்ந்து, வேத மந்திர முழக்கங்களுடன், இன்னிசை வாத்தியங்கள் முழங்க காலை 7.45 மணிக்கு தோ் வடம் பிடிக்கப்பட்டது. கோவிந்தா! கோவிந்தா! என்ற முழக்கங்களுடன் திரளான பக்தா்கள், தேரை வடம் பிடித்தனா். தேரோடும் வீதிகளில் வலம் வந்த தோ் பிற்பகலில் நிலையடியை அடைந்தது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூா், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com