மதுபாட்டில்கள் பறிமுதல்

செம்பனாா்கோவில் அருகே தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை து பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை து பாட்டில்களை பறிமுதல் செய்தனா். செம்பனாா்கோயில் அருகே கீழையூரில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கூட்டுறவு சாா்-பதிவாளா் வி. நடராஜன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மயிலாடுதுறை நல்லத்துக்குடியைச் சோ்ந்த முத்துக்குமாா் (36) அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து 51 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து செம்பனாா்கோவில் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com