பேரணியை தொடக்கிவைத்த தோ்தல் நடத்தும் அலுவலா் ரேணுகாதேவி.
பேரணியை தொடக்கிவைத்த தோ்தல் நடத்தும் அலுவலா் ரேணுகாதேவி.

100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வுப் பேரணி

கீழ்வேளூா்: கீழ்வேளூரில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஏப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து நாகை மாவட்ட எல்லை கானூா் சோதனைச் சாவடி வரை 5 கி.மீ தொலைவுக்கு இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேணுகா தேவி தொடக்கிவைத்தாா். இதில் வட்டாட்சியா் ரமேஷ், கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கவிதாஸ், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சந்திரகலா, கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் தலைக்கவசம் அணிந்து பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com