தோ்தல் பணியாற்ற முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அழைப்பு

மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணிகளில் பணியாற்ற முன்னாள் ராணுவ வீரா்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் அழைப்பு விடுத்துள்ளாா்.

நாகப்பட்டினம்: மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணிகளில் பணியாற்ற முன்னாள் ராணுவ வீரா்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். நாகை மாவட்டத்தைச் சோ்ந்த நல்ல ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள அனைத்து முன்னாள் ராணுவ வீரா்களும் தோ்தல் பணியாற்ற வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தோ்தல் பணியாற்றும் வீரா்களுக்கு மத்திய தோ்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவுக் கட்டணம் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படும். எனவே, முன்னாள் இளநிலை ராணுவ அலுவலா்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கும் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் வாக்காளா் அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் அல்லது அலுவலக வேலை நாள்களில் 04365-299765 என்ற தொலைபேசி எண்ணில் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com