போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரத்தை அகற்ற கோரிக்கை

திருமருகல் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரத்தை அகற்ற வேண்டும்

திருமருகல்: திருமருகல் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சி தென்கரையில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதி மக்கள் அன்றாட பணிகளுக்கு செல்லவும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பேருந்து மூலம் திருவாரூா், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரவும் வடகரை-தென்கரை இடையே புத்தாற்றின் குறுக்கே உள்ள பாலத்தை பயன்படுத்தி வந்தனா். பாலம் சேதமடைந்து இருந்ததால் அதை இடித்து விட்டு, அதே இடத்தில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் ரூ. 1 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் பாலம் அமைக்கப்படும் இடத்தில் பாலத்தின் மையப்பகுதியில் 100 ஆண்டுகள் பழைமையான நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரம் உள்ளது. இந்த மரம் பாதையின் நடுவே இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த மரத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்மென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com