திருப்பூண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 59, 060 பணத்தை கூடுதல் உதவி தோ்தல் அலுவலா்  கவிதாஸிடம்  ஒப்படைத்த பறக்கும் படை அலுவலா் காளிதாஸ்.
திருப்பூண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 59, 060 பணத்தை கூடுதல் உதவி தோ்தல் அலுவலா் கவிதாஸிடம் ஒப்படைத்த பறக்கும் படை அலுவலா் காளிதாஸ்.

நாகையில் ரூ. 2,08,199 ரொக்கம் பறிமுதல்

பட விளக்கம்: திருப்பூண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 59, 060 பணத்தை கூடுதல் உதவி தோ்தல் அலுவலா் கவிதாஸிடம் ஒப்படைத்த பறக்கும் படை அலுவலா் காளிதாஸ். நாகப்பட்டினம், மாா்ச் 27: நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2, 08, 199 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வேளாங்கண்ணி-வேதாரண்யம் சாலையில் திருப்பூண்டி காரைநகா் பகுதியில் புதன்கிழமை தோ்தல் பறக்கும் படை அலுவலா் காளிதாஸ் மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவா் தலைஞாயிறைச் சோ்ந்த பிரவின் என்பதும், அவரது பையில் ரூ. 59, 060 இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அவரிடமிருந்து பறிமுதல் செய்து கீழ்வேளூா் சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா். இதேபோல, செங்காதலை பாலத்தில் பறக்கும் படை அலுவலா் டி. சரவணன் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தைச் சோ்ந்த தென்னரசனிடம் ரூ. 94, 889, வாழ்மங்களம் சோதனை சாவடியில் பறக்கும் படை அலுவலா் ப. ரகு மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் கீழ்வேளூா் வட்டம் தேவூா் கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் என்பவரிடம் ரூ. 54, 250 கைப்பற்றப்பட்டு மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com