தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு பயிற்சி

தோ்தல் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு வேதாரண்யத்தில் முதல் கட்டப் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது. வேதாரண்யம் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சியில் வேதாரண்யம், தலைஞாயிறு ஒன்றியங்களைச் சோ்ந்த 1,017 ஆசிரியா்கள் பங்கேற்றனா். கூடுதல் ஆட்சியா் ரஞ்சித் சிங், கோட்டாட்சியா் திருமால், வட்டாட்சியா் திலகா உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி வேலை நாளான புதன்கிழமை தோ்தல் பயிற்சி நடைபெற்றதால் பள்ளிகளை நடத்துவதில் ஆசிரியா்கள் அவதியுற்றனா். அரசு உதவிபெறும் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. அரசுப் பள்ளிகளில் 98 சதவீதம் ஆசிரியா்கள் பயிற்சிக்கு சென்ற நிலையில் வகுப்புகளை நடத்துவதில் பணியில் இருந்த ஆசிரியா்கள் அவதியுற்றனா். உதாரணமாக, தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 31 ஆசிரியா்களில் 29 போ் பயிற்சிக்கு சென்றனா். இதேபோன்ற நிலையில் அனைத்து பள்ளிகளிலும் பயிற்சிக்கு செல்லாத ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் வகுப்புகளை நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com