ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.70 ஆயிரம் பறிமுதல்

கீழ்வேளூா் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.72 ஆயிரத்தை, உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கும் பறக்கும் படை அதிகாரி தெய்வேந்திரன் உள்ளிட்டோா்.
கீழ்வேளூா் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.72 ஆயிரத்தை, உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கும் பறக்கும் படை அதிகாரி தெய்வேந்திரன் உள்ளிட்டோா்.

நாகை அருகே உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.72 ஆயிரம் ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே கீழ்வெண்மணி- இரிஞ்சியூா் சாலையில் உள்ள அய்யனாா் கோயில் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி தெய்வேந்திரன் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் கீழ்வேளூா் என்.எஸ். மில் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ.72,000 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும்படையினா், சண்முகவேலிடம் இருந்த ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேணுகா தேவி, கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கவிதாஸ் வாயிலாக கீழ்வேளூா் சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com