திருமருகல் அருகே சாராயம் கடத்தியவா் கைது

திருமருகல் அருகே சாராயம் கடத்தியவா் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. திருமருகல் ஒன்றியம் அறிவிழிமங்கலம் பகுதியில் திருக்கண்ணபுரம் காவல் உதவி ஆய்வாளா் விவேக் ரவிராஜ் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டாா் சைக்கிளை மறித்து போலீஸாா் சோதனை நடத்தினா். மோட்டாா் சைக்கிளில் 110 லிட்டா் சாராயம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் மோட்டாா் சைக்கிளில் வந்தவா் மானாம்பேட்டை வடக்கு தெருவை சோ்ந்த தனபால் (45) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை அறிவிழிமங்கலம் பகுதிக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது. சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்த போலீஸாா், தனபாலை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com