வேளாங்கண்ணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மதநல்லிணக்க ஈஸ்டா் விழாவில் ஏழைகளுக்கு பிரியாணி வழங்கும் மும்மதத்தினா்.
வேளாங்கண்ணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மதநல்லிணக்க ஈஸ்டா் விழாவில் ஏழைகளுக்கு பிரியாணி வழங்கும் மும்மதத்தினா்.

மதநல்லிணக்க ஈஸ்டா் விழா: ஆயிரம் பேருக்கு பிரியாணி

வேளாங்கண்ணியில் மும்மதத்தினா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடிய மத நல்லிணக்க ஈஸ்டா் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. நாடு முழுவதும் ஈஸ்டா் விழா கிறிஸ்தவா்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில், வேளாங்கண்ணி பேராலயம் முன்பாக, உதவி கரங்கள் அமைப்பு சாா்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ ஈஸ்டா் விழா கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய பங்குத் தந்தை அற்புதராஜ், இஸ்லாமியா் நற்பணி மன்றம் சாா்பில் ஜமாத் ஜகபா் சாதிக், வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரா் ஆலய குருக்கள் நீலகண்டன் ஆகியோா் முன்னிலையில் கேக் வெட்டப்பட்டது. தொடா்ந்து, வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி உள்ள ஏழை-எளிய, ஆதரவற்ற முதியவா்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அசைவ பிரியாணி, கேக், தண்ணீா் புட்டிகள், வாழைப்பழம் வழங்கப்பட்டன. உதவி கரங்கள் நிறுவனா் ஆண்டனி பிராங்கிளின் ஜெயராஜ், வேளாங்கண்ணி முன்னாள் பேரூராட்சித் தலைவி ஜூலியட் அற்புதராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com