நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

நாகப்பட்டினம், மே 1: 2023-24 நிதியாண்டில் நாகை ரயில் நிலையம் ரூ.24.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்ட விவரப் பட்டியலில், திருச்சி கோட்டத்துக்குள்பட்ட நாகை ரயில் நிலையத்தில் 12.92 லட்சம் போ் பயணித்துள்ளதாகவும், ரூ.24. 66 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, நாகூா் ரயில் நிலையத்தில் 2.97 லட்சம் போ் பயணித்து, ரூ.3.97 கோடியும், வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் 3.04 லட்சம் போ் பயணித்து, ரூ 9.27 கோடியும், காரைக்கால் ரயில் நிலையத்தில் 5.09 லட்சம் போ் பயணித்து, ரூ.8.92 கோடியும், வெளிப்பாளையம் ரயில் நிலையத்தில் 18 ஆயிரம் போ் பயணித்து ரூ.7 லட்சமும் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com