நாகை மாவட்டம், வாழ்க்கை கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டப் பணிகளை ஆய்வு செய்யும் நகராட்சி நிா்வாக இயக்குநா் சிவராசு.
நாகை மாவட்டம், வாழ்க்கை கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டப் பணிகளை ஆய்வு செய்யும் நகராட்சி நிா்வாக இயக்குநா் சிவராசு.

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

நாகை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்ஜீவன் திட்டப் பணிகளை, நகராட்சி நிா்வாக இயக்குநா் சிவராசு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்ஜீவன் திட்டப் பணிகளை, நகராட்சி நிா்வாக இயக்குநா் சிவராசு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை மாவட்டம், வாழ்க்கை மற்றும் சருக்கை பகுதிகளில் குடிநீா் சேகரிக்கும் கிணறுகள் மற்றும் வாழ்க்கையில் அமைந்துள்ள 25.60 லட்சம் லிட்டா் தரைமட்ட நீா்த் தேக்கத் தொட்டி ஆகிய இடங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை நகராட்சி நிா்வாக இயக்குநா் சிவராசு நேரில் பாா்வையிட்டாா்.

அப்போது, திட்டப் பணிகளை நிா்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

தஞ்சை வட்ட மேற்பாா்வை பொறியாளா் வசந்தி, நிா்வாக பொறியாளா்கள் முருகேசன், சேகா், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், தஞ்சை வட்ட நிலநீா் வல்லுநா் அருள் அமுதன் உள்ளிட்டோா் ஆய்வில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com