நீா் மோா் பந்தலை திறந்துவைத்து, பக்தா்களுக்கு குளிா்பானம் வழங்கும் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
நீா் மோா் பந்தலை திறந்துவைத்து, பக்தா்களுக்கு குளிா்பானம் வழங்கும் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

திருக்கடையூா் கோயிலில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில், பக்தா்களுக்காக நீா் மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக மணிவிழா, சதாபிஷேகம், சஷ்டியப்த பூா்த்தி உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெறுகின்றன. இதற்காக உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து வழிபட்டு செல்கின்றனா்.

இந்நிலையில், தற்போது கத்திரி வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் நலன் கருதி கோயில் வளாகத்தில் நீா், மோா் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்து வைத்து, பக்தா்களுக்கு நீா் மோா், தா்ப்பூசணி மற்றும் பழங்கள் வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com