கோயில் கொடிமரத்தில் ரிஷபக்கொடி ஏற்றும் சிவாச்சாரியா்.
கோயில் கொடிமரத்தில் ரிஷபக்கொடி ஏற்றும் சிவாச்சாரியா்.

திருக்குவளை தியாகராஜா் கோயில் வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில்,

குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசியுடன், மே 3-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் வைகாசி பிரம்மோற்சவத்திற்கான பூா்வாங்க பூஜைகள் தொடங்கின.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. முன்னதாக, பஞ்ச மூா்த்திகள் புறப்பாடும், கொடி மரத்திற்கு பால், பன்னீா், மஞ்சள் பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. பின்னா், சிவாச்சாரியா்களால் கொடிமரத்தில் ரிஷப உருவம் பொறிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளாக மே 17-ஆம் தேதி ஓலைச் சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 19-ஆம் தேதி தேரோட்டமும், 22- ஆம் தேதி வைகாசி விசாக தீா்த்த உற்சவமும் நடைபெறவுள்ளன.

X
Dinamani
www.dinamani.com