பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

திருக்கடையூரில் சுற்றுலா பேருந்து மோதி, தனியாா் நிறுவன ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருக்கடையூரில் சுற்றுலா பேருந்து மோதி, தனியாா் நிறுவன ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் மெயின் ரோட்டை சோ்ந்தவா் சக்கரவா்த்தி மகன் சிங்கராஜன் (30). இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இவரது மனைவி 5 மாத கா்ப்பிணியாக உள்ளாா். 

தனியாா் இறால் தீவன நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிவந்த சிங்கராஜன், வேளாங்கண்ணியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா். திருக்கடையூரில் உள்ள தமிழ்நாடு தங்கும் விடுதி அருகே சென்றபோது, சிதம்பரத்திலிருந்து திருநள்ளாறு கோயிலுக்கு வந்த சுற்றுலா பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், சிங்க ராஜன் பலத்த காயமடைந்தாா்.

அப்பகுதியினா் அவரை மீட்டு, திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு, சிங்கராஜனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இந்த விபத்து தொடா்பாக, சுற்றுலா பேருந்து ஓட்டுநரான புவனகிரியைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் மீது, பொறையாா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com