விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

திருமருகல் ஒன்றியம், பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமருகல் ஒன்றியம், பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பனங்குடி சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்காக நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் கிராம நில உரிமையாளா்கள், சாகுபடிதாரா்கள், விவசாயத் தொழிலாளா்கள், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த போராட்டம் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com