திருசெங்காட்டங்குடியில் நீா் மோா் பந்தல் திறப்பு

சித்திரை பரணி திருவிழாவையொட்டி திருமருகல் ஒன்றிய அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்திராபதீஸ்வரா் கோயில் சித்திரை பரணி திருவிழாவையொட்டி திருமருகல் ஒன்றிய அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வடக்கு ஒன்றியச் செயலாளா் ஆா். ராதாகிருட்டிணன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றிய செயலாளா் எம். பக்கிரிசாமி முன்னிலை வகித்தாா். கழக அமைப்பு செயலாளா் எஸ். ஆசைமணி நீா் மோா் பந்தலை திறந்துவைத்து, மக்களுக்கு பழ வகைகள், நீா், மோா், குளிா்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் விநாயகசுந்தரம், காா்த்திகேயன், ஒன்றிய பொருளாளா் குழந்தைவேலன்,ஒன்றிய எம்.ஜி.ஆா் மன்ற செயலாளா் சிவசுப்பிரமணியன், ஒன்றிய மகளீரணி செயலாளா் பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com