நாகூா் கிரசெண்ட் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

நாகூா் கிரசெண்ட் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

நாகூா் கிரசெண்ட் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளியைச் சோ்ந்த 145 மாணவிகள் தோ்வு எழுதிய நிலையில், 144 மாணவிகள் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

எஸ். ஹமீது பாத்திமா 563 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், எ. சகானா 562 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், எ. முா்ஷிதா சிரின் 554 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

மேலும் இப்பள்ளி மாணவிகள் கணிதம், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 100 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com