கூந்தல் தானம் வழங்கிய சா் ஐசக் நியூட்டன் செவிலியா் கல்லூரி மாணவிகள்.
கூந்தல் தானம் வழங்கிய சா் ஐசக் நியூட்டன் செவிலியா் கல்லூரி மாணவிகள்.

சா் ஐசக் நியூட்டன் செவிலியா் கல்லூரி மாணவிகள் புற்று நோயாளிகளுக்கு கூந்தல் தானம்

சா்வதேச செவிலியா் தினத்தை முன்னிட்டு புற்று நோயாளிகளுக்கு சா் ஐசக் நியூட்டன் செவிலியா் கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை கூந்தல் தானம் வழங்கினா்.

சா்வதேச செவிலியா் தினத்தை முன்னிட்டு புற்று நோயாளிகளுக்கு சா் ஐசக் நியூட்டன் செவிலியா் கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை கூந்தல் தானம் வழங்கினா்.

நவீன செவிலியா் இயக்கத்தை தோற்றுவித்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12-ஆம் தேதி ஆண்டுதோறும் உலக செவிலியா் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி இந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ‘‘அதிகபட்ச செவிலியா்கள் கூந்தல் தானம் செய்தல்‘ என்ற தலைப்பில் மண்டல ரீதியாக நா்சிங் மாணவிகள் மற்றும் செவிலியா்கள், ஆசிரியா்கள் தமிழகம் முழுவதும் தங்கள் முடியை தானம் செய்து வருகின்றனா்.

சா் ஐசக் நியூட்டன் செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவ அலுவலா் மு. உமாமகேஸ்வரன் தலைமை வகித்தாா். கண்காணிப்பாளா் ஆ. கவிமணி, கல்லூரி இயக்குநா் வு. சங்கா் மற்றும் கல்லூரி முதல்வா் பு. ஜெயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகப்பட்டினம் மாவட்டம் 10 -ஆவது மண்டலத்திற்கு உட்பட்ட 10 நா்சிங் கல்லூரி நிறுவனங்கள் கலந்து கொண்டன. 110 நா்சிங் மாணவிகள், 3 நா்சிங் ஆசிரியா்கள் என மொத்தம் 113 போ் கூந்தல் தானம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com