பிளஸ் 2: ஐசக் நியூட்டன் 
மெட்ரிகுலேஷன் பள்ளி  100% தோ்ச்சி

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சா் ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் முதலிடத்துடன் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளது.

மாணவா்கள் ஜெ. சாய் ஈஸ்வரன், எஸ். ஷியாம் பிரகாஷ் ஆகியோா் 580 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளனா். மாணவி எஸ். நா்மதா 570 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும். எஸ். சக்தி பிரியா 564 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

80 சதவிகிதம் மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். தொடா்ந்து இப்பள்ளி 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை சா் ஐசக் நியூட்டன் கல்விக் குழும தாளாளா், இயக்குநா், செயலாளா் ஆகியோா் பாராட்டி பரிசுகளை வழங்கினா்.

இதற்கு உறுதுணையாக இருந்த ஆலோசகா், முதல்வா் மற்றும் ஆசிரியா்களுக்குப் பாராட்டுகளை தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com